நெல்லையில் 496 வாக்கு சாவடிகள் பதட்டமானவை… ஆட்சியர்

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களிடம்  மாவட்டத்தில் நெல்லை, தென்காசி என இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லைக்கு மாவட்ட ஆட்சியரும் , தென்காசி தொகுதிக்கு மாவட்ட வருவாய் அலுவலரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இருப்பார்கள் .

மாவட்டத்தில் 25 லட்சத்து 37 ஆயிரத்து 683 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 2979 வாக்கு சாவடிகள் உள்ளது. முதற்கட்டமாக 8327 வாக்கு பதிவு எந்திரமும் ,4465 மின்னணு கட்டுப்பாட்டு எந்திரமும் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் எந்திரங்கள் வர உள்ளன. மாவட்டத்தில் பதட்டமான வாக்கு சாவடியாக 496 ம், மிகப் பதட்டமான வாக்குச்சாவடிகளாக 32 கண்டறியப்பட்டுள்ளது,

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பேர் என 10 பறக்கும் படை அமைக்கப்பட்டு முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்டத்தில் இது வரை பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை மேற் கொண்டு முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் 80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக எந்த வழக்கு பதிவு செய்யவில்லை . பொதுமக்களுக்கு தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் . ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கட்டுப்பாட்டு அறையும் , இரண்டு பாராளுமன்ற தொகுதிக்கும் சேர்த்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.