நீதிமன்றத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ராஜா – கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் உத்தரவிட்டிருந்த நிலையில் மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் மதுரை எஸ்.பி ஆகியோர் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்கு நேரில் ஆஜராகினர்