நியாயமான குற்றம்… நேர்மையான பதில் வேண்டும் …கமல்

உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தொல்லைகள் பற்றி #MeToo என்ற ஹேஸ்டேக்கில் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் இந்தக் குற்றச்சாட்டுகள் சமீப காலமாக பெருகி உள்ளன.  பாலிவுட் நடிகையான தானுஸ்ரீ தத்தா பிரபல நடிகரான நானா பட்நேகர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தினார். அவரைத் தொடர்ந்து, கங்கனா ரனாவத் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் அவருக்கு ஆதரவாக, தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் பற்றி விவரித்தனர்.  அதேபோல், பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியரான வைரமுத்து மீது பாலியல் புகார்களை சுமத்தினார்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவரிடம்#MeToo  பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “MeToo வின் கீழ் பாலியல் குற்றச்சாட்டுகள் நியாயமானவையாக இருக்க வேண்டும். இந்த விவாகரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் பதிலளிக்க வேண்டும்,” என தெரிவித்தார்.