நிச்சயம் வெற்றி பெறுவோம் -துணை சபாநாயகர் தம்பிதுரை

கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

மக்கள் 5-ஆண்டுகளுக்கு பணியாற்ற வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்கள். தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்கு தான் தோடர்ந்து போராடி வருகிறோம். குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் ராஜினாமா செய்வது நல்ல செயலாக இருக்க முடியாது. தமிழக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6-வார காலம் அவகாசம் அளித்துள்ளது. 4-வாரகாலம் முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்னும் வாரியத்தை அமைக்கப்படாததாலே மக்களவையில் தொடர்ந்து போராடி வருகிறோம்.

மக்களவை முடங்கியது. மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்ற பேச்சுக்கு இடமில்லை. தமிகத்தின் உரிமைகளை பெற போராடுவது என்பது ஜனநாயக நாட்டில் நமக்கு அளித்துள்ள உரிமை.எனவே ஒருநாளில் ராஜினாமா செய்து விட்டால் மக்களவை தொடர்ந்து செயல்படதான் போகிறது.

அதன்பின் நமது உரிமையை கேட்டு பெறமுடியாது என்கிற காரணத்தில் தான் தொடர்ந்து போராடி வருகிறோம். நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் வெற்றி பெறுவோம்.

கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி.