நாளை காலை 9 மணிக்கு…

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’  இதில் ரஜினி ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.இப்படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார்.
மேலும் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். தற்போது இதன் டீசரை (செப்டம்பர் 13) நாளை காலை 9 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இதுதவிர இந்த டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க ரசிகர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.