நாடாளுமன்ற தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல நெல்லையில் தெறிக்கவி்ட்ட கமல்

நாடாளுமன்ற தேர்தல் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல என்றும் டெல்லியை கேள்வி கேட்கும் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

 

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெண்ணி மாலையை ஆதரித்து பாளையங்கோட்டை தினசரி சந்தை பகுதியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
அப்போது பேசிய அவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டிய கருணாநிதி மகள் இன்று அந்த தொகுதிக்கு களம் காண்பதாக தெரிவித்த அவர் அக்கட்சி பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது ஆக விமர்சனம் செய்தார் தற்போது தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார் இது இயற்கையான தட்டுப்பாடு அல்ல என்றும் இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்தார் மேலும் ஊடகங்கள் நமது செய்தியை இருட்டடிப்பு செய்வதாக மக்கள் தெரிவிப்பதாக தெரிவித்த அவர் தேர்தல் ஆணையமும் நம்மை இருட்டடிப்பு செய்வதாக கமல்ஹாசன் தெரிவித்தார்