நடிப்பதற்கு எதிர்ப்பு – விவாகரத்து கேட்கும் டிவி தொகுப்பாளினி டிடி

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கும், ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணம். இதனால் டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் இயக்கிய ‘ப.பாண்டி’ படத்தில் டிடி நடித்தார். தற்போது கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரங்கள்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சினிமாவில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பரஸ்பர முறையில் விவாகரத்து கோரியுள்ளதால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு பின்னர் விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும். எனவே, டிடி-க்கு விரைவில் விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *