நடிகையாக அமலா செய்த செயல்..சமூகவலைத்தளங்களில் குவியும் பாராட்டு! 

தமிழ் சினிமாவில் 80-90’ஸ்களில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்த நடிகைகளில் அமலாவும் ஒருவர். இவர் ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

படங்களில் நடித்து கொண்டிருந்த போதே, தெலுங்கு நடிகரான நாகர்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்த அமலா தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இந்தியாவில் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.

 

@amalaakkineni1
Voted !! Thank you Hyderabad , nice arrangements , no crowd at 7.30 am , no stress . I love India ❤

இன்று ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இதையடுத்து நடிகை அமலா காலையில் ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டு போட்டுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் ஓட்டு போட்டுவிட்டேன், காலை 07.30 மணிக்கே எந்த ஒரு கூட்டமும், இல்லை, நல்ல படியாக சென்று கொண்டிருக்கிறது.

ஐ லவ் இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Andhra CM Chandrababu Naidu, his wife Bhuvaneshwari, his son Nara Lokesh and Lokesh’s wife Brahmani, casted their vote at Undavalli in Amaravati