நடிகர் லாரன்ஸை அவதூறாக பேசுவதா….?திருநங்கைகள் எச்சரிக்கை

ராகவா லாரன்ஸ், தனக்கும் தன்னைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் ரசிகர்களுக்கும் மன உளைச்சல் தரும் வகையில் குறிப்பிட்ட கட்சியின் `ஒரு சில தொண்டர்கள்’ செயல்படுவதாக சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியையும் பெயர் குறிப்பிடாமல் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் “லாரன்ஸ் மீது எனக்கு எப்போதும் வருத்தமில்லை. மதிப்பு தான். யாராவது ரெண்டு பேர் புரிதலில்லாமல் விமர்சித்து இருக்கலாம். அப்படி இருந்தா அது தப்பு.அது யாருன்னு கண்டுபுடிச்சு நடவடிக்கை எடுக்கலாம்.போலியான முகநூல் பக்கங்களை வெச்சுகிட்டு அந்த மாதிரி வேலைகள் நடக்க வாய்ப்பிருக்கு. அப்படி செஞ்சிருந்தா அது தவறு. அதுக்கா நான் தம்பி லாரன்ஸ்கிட்ட என் வருத்தத்தை தெரிவிச்சுக்கிறேன்” என்றார்.

இதனிடையே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூலில் “அதுசரி… எச்சரிக்கையும் சவாலும் விடுமளவுக்கு என்ன தான் நடந்தது. அப்படி எங்கு தான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள், உங்களைப் பற்றி எழுதியது யார், திட்டியது யார், உங்க கூட மோதவா நாங்க வேலை செய்றோம். சம்பந்தமில்லாமல் ஏன் இந்த விவகாரத்தை பேசணும். யார் தூண்டி விட்டு இந்த அறிக்கை. நாம உண்டு நம்ம வேலையுண்டு படத்தை ரிலீஸ் பண்ணிட்டு போலாமே… படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் பப்ளிசிட்டிக்கு உங்களுக்கு யாராவது வேணும் என்ன?”
`
பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்து கொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க… சிரிக்கிறதா… அழுறதான்னு தெரியலை. சவால் விடணும்… மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டி கிட்டதான்… உங்கள் படத்துக்குப் பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்… அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்… நாங்கள் மோடி… ராகுல் காந்தி என மோதிக் கொண்டிருக்கிறோம்.. உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை” என்ற விமர்சனமும் செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் சுரேஷ் காமாட்சியை வன்மையாக கண்டிப்பதாக திருநங்கைகள் சங்கத்தை சேர்ந்த ரேணுகாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருநங்கைகள் சங்கத்தை சேர்ந்த ரேணுகா மற்றும் செனீலா நடிகர் ராகவா லாரன்ஸ் செய்துவரும் சமூக சேவைகளை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் சுரேஷ் காமாட்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் மேலும் இதற்கு அவர் பகீங்கர மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறினார்கள்.