நடிகர் கார்த்திக் பிரச்சாரம்

 

💥🚢 நடிகர் கார்த்திக் தச்சநல்லூர் மேலப்பாளையம் குறிச்சி, நாங்குநேரி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் 🐾 💐

 

நெல்லையில் தேர்தலின்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனவும் அமரன் பாடல் பாடி நடிகர் கார்த்திக் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் நெல்லை பாராளுமன்ற தோ்தலில் அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன ஆதரித்து நடிகரும் மனித உரிமை காக்கம் கட்சியின் தலைவருமான கார்த்திக் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசுகையில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன ஆனால் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி செல்கின்றனர் எனவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு ரத்து செய்வதன் மூலம் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் இஷ்டம் போல் அள்ளி வீச மாட்டார்கள் என பேசினார் அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் கரையிருப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பொதுமக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கைகளை ஏற்று அமரன் பாடல் பாட்டு பாடி அசத்தினார் பொதுமக்களும் உற்சாகம் அடைந்தனர். இந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் தச்சநல்லூர் மேலப்பாளையம் குறிச்சி, நாங்குநேரி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்