தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

டாக்காவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், 2-ஆவது ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தியிருக்கிறது. அதேநேரத்தில் பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது. 2-ஆவது ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானுடன் டிரா செய்தது. “ஏ’ பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் தனது 3வது ஆட்டத்தில் இந்திய அணி இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது