தொகுதிக்கு ஐம்பது கோடி …மாநில தலைவர் அழகிரி

காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார் அபோது அவர் கூறுகையில் நாளை நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, முக ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

விவசாயம், வேலையில்லா திண்டாட்டம், சிறு குரு தொழில்கள் முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து தங்களது தேர்தல் பிரச்சாரம் இருக்கும்.இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் கூட்டணியாகவும், பேரம் பேசாத கூட்டணியாகவும் தங்கள் கூட்டணி உள்ளது.ஜனநாயக இந்தியாவை ஆர்.எஸ்.எஸ் பாஜக கைப்பற்றி நாட்டை சீரழித்து விட்டது, ரிசர்வ் வங்கி சி.பி.ஐ நீதிமன்றம் போன்ற அணைத்திலும் தலையீட்டை செலுத்திய பாஜக தேர்தல் ஆணையத்திலும் தலையிட்டது.

மோடியின் பிரச்சார வியூகம் தயராகாததால் தான் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தியது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் தேர்தளுக்காக வீதி வீதியாக வீடு வீடாக பணம் கொடுக்கும் நிலை அதிகரித்து உள்ளது.ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஐம்பது கோடி என பாஜகவும் அதிமுகவும் ஒதுக்கி பதுக்கி வைத்துள்ளது, இதனால் ஏழை மற்றும் சிறிய கட்சிகள் பாதிப்படைகின்றன.பணபலத்தால் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல் ஆணையம் தான் தோல்வி அடைந்து உள்ளது.இந்தியா பாகிஸ்தான் சண்டையை விட எல்லை பிரச்சனையை விட தமிழகத்தில் நியாயமான தேர்தல் நடத்துவது பெரிய விஷயம்.மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அந்த மாவட்டத்தில் தேர்தல் தேதியை மாற்றி அமைக்கலாம், கடவுளை வணங்குவதற்கே பொதுமக்கள் முக்கியத்துவம் அளிப்பார்கள் வாக்களிக்க வர மாட்டார்கள்.தமிழகத்தில் தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்.மதசார்பற்ற அரசு மத்தியில் அமைய வேண்டும் என்பதில் அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் உறுதியாக உள்ளது.எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் விதிகளின் படிதான் தண்டனை கொடுக்க வேண்டும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 1 ஆண்டுகள் ஆகியும் நிர்மலா தேவி வழக்கில் ஜாமீன் கொடுக்கப்பட வில்லை. இது தவறானது. கலைஞர் இறந்தாலும் ஜெயலலிதா இறந்தாலும் அது வெற்றிடம் ஆகாது அதில் ttv வந்து விட முடியாது தேர்தலுக்கு பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் மாற்றம் வரும் என்றும் அவர் கூறினார்.