தேவி நாயக்கன்பட்டி கிராம நிலாப் பெண்

திண்டுக்கல் மாவட்டம், தேவி நாயக்கன்பட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் தைமாத பவுர்ணமி நாளன்று இரவு முழுவதும் நிலாபெண் வழிபாடு கிராம மக்களால் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

முன்னதாக ஒரு வாரத்துக்கு முன் ஊர் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தில் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் நிலாப் பெண்ணை தேர்வு செய்து தேர்வு செய்யப்படும் சிறுமிக்கு தங்கள் வீடுகளில் இருந்து பால், பழம் உள்ளிட்ட உணவுகளை கோயிலில் வைத்து வழங்குகின்றனர்.

இந்த ஆண்டுக்கான நிலாப் பெண்ணாக தேவிநாயக்கன்பட்டியை சேர்ந்த ரமேஷ், தவமணியின் மகள் கனிஷ்கா (7) தேர்வு செய்யப்பட்டார். சிறுமியிடம் ஆவாரம் பூக்கள் நிரம்பிய கூடைகளை கொடுத்து மாசடைச்சி அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து மாரியம்மன் கோயிலுக்கு முன் வந்த மக்கள் சிறுமியை அங்கு அமர வைத்து இரவு முழுவதும் பெண்கள் கும்மியடித்து நிலா பாடல்களை பாடி வழிபட்டு பொங்கல் வைத்து வழங்கினர். நிலா பெண் வழிபாடு பழக்கம், எங்கள் கிராமத்தில் தொன்று தொட்டு நடக்கிறது. இந்த விழா கொண்டாடுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை என இக்கிராம பெண்கள் தெரிவித்துள்ளனர்