தேர்தலில் களம் இறங்க வாய்ப்பு…நடிகை கஸ்தூரி,

நடிகை கஸ்தூரி, சலங்கை துரை இயக்கத்தில் இ.பி.கோ 302 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் அளித்த பேட்டியில் நான் பல்வேறு வேடங்களில் நடித்து இருந்தாலும் போலீஸ் உடை அணிவது இது தான் முதல் முறை.

என்னை பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நிறைய கட்சிகள் அழைப்பு விடுத்தன. கட்சி சார்ந்த அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை. அரசியலை பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கு பிரபலம், பின்புலம், மக்கள் சேவை அனுபவம் என சில தகுதிகள் இருக்கின்றன. நான் உள்ளே நுழைந்தால் நிறைய நல்லவர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனவே சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உண்டு. சுயேச்சையாக நிற்கும் அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை. சுயேச்சையை மதித்து ஓட்டு போடும் அளவுக்கு தமிழக மக்கள் இன்னும் மாறவில்லை. எனவே தனித்தோ சுயேச்சையாகவோ களம் இறங்க மாட்டேன் என்றார்.