தெலுங்கு தேசத்தில் தமிழ் பேசும் ஒபய்யா

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் நடித்து முடித்த விஜய் சேதுபதி சிரஞ்சீவியின் வரலாற்றுப் படமான ‘சை ரா நரசிம்மரெட்டி’யில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் நெருங்கிய உதவியாளராக ஒபய்யா என்ற கதாபாத்திரத்தில் தான் தமிழ் பேசும் நபராக நடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

கன்னட நடிகர் சுதீப் உடன் விஜய் சேதுபதி இருக்கும் படக் காட்சியின் புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.