தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 2ம் கட்ட விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 2ம் கட்ட விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தொடங்கினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதையடுத்து காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இது குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் தற்போது தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் 2ம் கட்ட விசாரணை நடைபெறுகிறது.