தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் எரிப்பு -செய்தியாளர்கள் மீது தாக்குதல்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து போலீசாரால் விரட்டப்பட்ட போராட்டகாரர்கள் மீண்டும் திரண்டு ஆட்சியர்  அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கேமராக்களை பறித்து செய்தியாளர்களை தாக்கி போலீசார் விரட்டியுள்ளனர்.