துாத்துக்குடி கலவரத்துக்கு எம்.எல்.ஏ. கீதாஜீவனே காரணம் -முதல்வர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, நடைபெற்ற சம்பவங்கள் குறித்த விளக்க அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.

பின்னர், பேசிய அவர் தடுப்புகளை மீறி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் கூடிய புகைப்படத்தை, சட்டப்பேரவையில் காண்பித்தார். அதே போல், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம், பேருந்துகளுக்கு தீ வைப்பு தொடர்பான புகைப்படங்களையும் காண்பித்த அவர், திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது

ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் தான் காரணம் 144 தடை உத்தரவை மீறி திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்  தூத்துக்குடி சம்பவத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளின் தூண்டுதலே காரணம் போராட்டத்தில் சில அரசியல் கட்சியினர் ஊடுருவியதாக கூறியது திமுகவினரைத் தான்  திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சில விஷமிகளும் சேர்ந்து விட்டனர் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அங்கு தற்போது கலவரம் ஏற்பட்டதற்கும் திமுகவே காரணம் ஸ்டாலின் தூத்துக்குடி சென்றபோது, திமுக பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கு யார் மேல் கோபம் என்பது தெரிய வருகிறது என குற்றஞ்சாட்டிய முதலமைச்சர், திமுக செய்த தவறை மறைப்பதற்காகவே, மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதாகவும் தூத்துக்குடியில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது  என்றார்