துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், சீமான், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதே போன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, ஒரு தனிப்பட்ட அமைப்பு விசாரித்தால் தான் விசாரணை நேர்மையாக நடைபெறும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? என கேள்வி ஏற்கனவே எழுப்பிய நிலையில்  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க  உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.