திரையில் தெரசா வரலாறு.

அல்போனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னை தெரேசா இந்தியக் குடியுரிமையைப் பெற்றவர் இவர் ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி பல ஆதரவற்ற மக்களுக்காக தொண்டாற்றியவர். தெரசாவுக்கு 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசை கிடைத்தது. 1980இல் இந்தியா பாரத ரத்னா விருதினை வழங்கி மகிழ்ந்தது

அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது. எயிட்ஸ் ,காசநோய் ,தொழுநோய்யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் அன்னை தெரேசா வாழ்கையை மையமாக வைத்து ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என இரண்டிலும் படமெடுக்க உள்ளனர். இதன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.