திருவாரூர் தொகுதி காலி : சபாநாயகர் தனபால் அறிவிப்பு

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இந்நிலையில் கலைஞர் கடந்த 7-ம் தேதி காலமானார்.  கலைஞர் மறைவு குறித்து தகவல் சட்டசபை செயலகத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கலைஞர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் தனபால் நேற்று அறிவிப்பு ஆணை வெளியிட்டார். இந்த அறிவிப்பு ஆணை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த தேதியில் இருந்து அடுத்த 6 மாத காலத்திற்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் இனி மேற்கொள்ளும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *