திருவனந்தபுரம் – மங்களுர் தினசரி இரவு நேர தினசரி குமரிக்கு ரயில்கால அட்டவணையில் நீட்டிப்பு செய்யப்படுமா? 

   கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கானக்கான பயணிகள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். குறிப்பாக குமரி மாவட்டத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் பல்வேறு பணிகள் நிமித்தம் கேரளாவுக்கு சென்று விருகின்றனர். இதைப்போல் குமரி மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் மதத்தை சார்ந்த மக்கள் கேரளாவில் முஸ்லீம் மக்கள் அதிகம் உள்ள கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு அதிக அளவில்பயணம் செய்கின்றனர். கேரளாவிலிருந்து குமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு வாரவிடுமுறைக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று வர குறிப்பாக வடகேரளா பகுதிகளுக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி தற்போது இல்லை. இதைபோல் கன்னியாகுமரிக்கு வரும்  சுற்றுலா பயணிகள் வயனாடு, மங்களுர்;, கூர்க்கு போன்ற பகுதிகளுக்கு நேரடி இரவுநேர ரயில் வசதி இல்லாமல் மிகவும் அவதிபடுகின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலை தரிசித்துவிட்டு மேற்கு கடற்கரை மார்க்கம் உள்ள கொல்லூர் முகாம்பிகை கோவில், உடுப்பி, கும்பசேரி, தர்மஸ்தலா, கோகர்னா போன்ற புனித இடங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 


தற்போது குமரி மாவட்டத்திலிருந்து  கேரளாவுக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் ஐந்து தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் அதிகாலையில் செல்லும் இரண்டு ரயில்களில் பயணம் செய்தால் மட்டுமே முழு கேரளாவுக்கும் பயணிக்க முடியும். இந்த ரயில்களை விட்டால் அடுத்த ரயிலாக காலையில் 7:00 மணிக்கு கன்னியாகுமரி – மும்பை ரயிலும்; அடுத்து காலை 10:30 மணிக்கு கன்னியாகுமரி – பெங்களுர் ரயில் ஆகும். காலை 10:30 மணிக்கு புறப்படும் இந்த ரயிலை விட்டால் 11 மணி நேரங்கள் கழித்து தினசரி ரயிலாக இரவு சென்னை – குரவாயூர் ரயில் மட்டுமே உள்ளது. இந்த மூன்று ரயில்களும் திருச்சூர் பாலக்காடு வரை மட்டுமே செல்லும். காலை 10:30 முதல் இரவு 9:40 வரை சுமார் 11 மணி நேரம் கேரளாவுக்கு செல்ல எந்த ஒரு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் குமரி மாவட்டத்திலிருந்து கிடையாது. பொதுவாக இரவு நேர ரயில்கள் என்று இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் மாலை 4:00 மணி முதல் இரவு 10 மணிவரை ஒரு நகரத்திலிருந்து புறப்படுமாறு இயக்கப்படும். ஏடு. காட்hக நாகர்கோவிலிருந்து மாலை சென்னை, கோவை, பெங்களுர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் கேரளாவுக்கு இரவு நேர ரயில்கள் என்று சொல்ல ஒரு ரயில் கூட இதுவரை குமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படவில்லை. குமரி மாவட்டத்துக்கு 1979-ம் ஆண்டு முதல் ரயில்கள் வந்து இயங்கி வருகிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் திருவனந்தபுரம் கோட்டம் குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக ஒரு இரவு நேர தினசரி ரயிலை கூட இயக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குமரி மாவட்ட பயணிகள் மங்களுர் மற்றும் வடகேரளா பகுதிகளுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளோ, அரசு பேருந்து வசதியோ, விமான வசதியோ கிடையாது. இங்கு உள்ள பயணிகளுக்கு ரயில்வசதி மட்டுமே உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர்க்கு செல்ல மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பயணிகள் தற்போது பேருந்துகளில் திருவனந்தபுரம் சென்றுவிட்டு அங்கிருந்து புறப்படும் இந்த மூன்று ரயில்களிலும் வடகேரளா மற்றும் மங்களுர்க்கு பயணிக்கின்றனர். இவ்வாறு குமரி மாவட்ட பயணிகள் நேரடி ரயில் வசதி இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் சென்று  பயணிப்பதால் குமரி மாவட்டத்திலிருந்து பயணிக்கும் பயணிகளின் வருவாய் திருவனந்தபுரம் ரயில் நிலையத்துக்கு சென்று அங்கு வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவுகிறது. குமரி மாவட்ட பயணிகள் வேறு மார்க்கங்களில் பயணிக்க முடியாத காரணத்தால் இந்த மூன்று மங்களுர் ரயில்களின் வருவாய் குமரி மாவட்ட பயணிகளின் மூலமாக கிடைக்கும் வருவாய் கணிசமான அளவில் உள்ளது. திருவனந்தபுரம் – மங்களுர் ரயில்களில் ஒரு ரயிலை நீட்டிப்பு செய்வதால் கேரளா பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்கப்போவது இல்லை.

கன்னியாகுமரியிலிலுருந்து நேரடியாக மங்களுருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டென்னீஸ் அவர்கள் 1989-ம் ஆண்டு ரயில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அப்போது முதல் இதுவரை சுமார் 25 ஆண்டுகளாகவே கன்னியாகுமரியிலிருந்து மங்களுர்க்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் 47ஃ48 என்ற எண் கொண்ட ரயில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த ரயிலை திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் திருவனந்தபுரத்துடன் நிறுத்தி விட்டனர். இதற்க மாற்று ஏற்பாடாக இது வரை எந்த ரயில் வசதியும் செய்யப்படவில்லை. இந்த கால கட்டத்தில் குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்கு ரயிலை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் குமரி மாவட்டத்துக்கு எதிராக செயல்பட்டனர். இந்த கண்ணணூர் ரயில்; 2005-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மங்களுர் வரை நீட்டிப்பு செய்து 16347ஃ16348   எண்கொண்ட ரயிலாக திருவனந்தபுரம் – மங்களுர் மார்க்கத்தில் தற்போது இயக்கபட்டு வருகிறது.

மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில்
வாராந்திர ரயில்- 16-11-2001
வாரத்துக்கு இரண்டுநாள் – 01-09-2004
வாரத்துக்கு மூன்றுநாள் – 04-07-2005
தினசரி – 16-09-2007

ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில்
வாரத்துக்கு மூன்றுநாள் – 13-09-2009
நாகர்கோவில் நீட்டிப்பு- 04-01-2010
தினசரி – 20-12-2010

கொச்சுவேலி – மங்களுர் அந்தோதைய ரயில்:-

திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர்க்கு தற்போது மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இயங்கிவரும் நிலையில் நான்காவது ரயிலாக கொச்சுவேலியிருந்து மங்களுர்க்கு புதிய அந்தோதியா ரயில்  அறிவிக்கப்பட்டள்ளது. குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக மங்களுர்க்கு தினசரி ரயில் இயக்க திருவந்தபுரத்திலிருந்து இயக்ப்பட்டு வரும் ஒரு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் அல்லது புதிய ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் புதிய ரயிலை கொச்சுவேலியிருந்து இயக்கியது குமரி மாவட்டத்தை வேண்டும் என்றே புறக்கணிக்கும் செயல் ஆகும்.

நெல்லை மாவட்ட பயணிகள் கோரிக்கை

திருச்சியிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி ரயில் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைப்போன்ற திருவனந்தபுரம் – சென்னை அனந்தபுரி ரயில் கேரளா பயணிகளுக்காக வேண்டி கொல்லம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இவ்வாறு நீட்டிப்பு செய்யப்பட்டதை போன்று திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் மங்களுர் ரயில்களில் ஒரு ரயிலை அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

ரயில் நீட்டிக்க கோரிக்கை:

திருவனந்தபுரத்திலிருந்து மங்களுர்க்கு இயக்கப்படும் மூன்று ரயில்களில் எதாவது ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி வரை நீட்டித்து இயக்க வேண்டும். இவ்வாறு இந்த ரயிலை நீட்டித்து இயக்க முடியாத நிலை இருந்தால் கன்னியாகுமரியிலிருந்து மங்களுர்க்கு புதிய தினசரி ரயில் வரும் ரயில்காலஅட்டவணையில் அறிவித்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் பொன்னர் ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்து வரும் காலஅட்டவணையில் அறிவிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.