திருவண்ணாமலையில் பிந்து மாதவி …

திருவண்ணாமலை கோவிலில் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணுடன் நடிகை பிந்து மாதவி சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிந்து மாதவி. கிருஷ்ணா நடிப்பில் வந்த கழுகு படத்தின் மூலம் அனைவரும் அறியும் நடிகையாக மாறினார். இப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இவர் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பைக் ரைட் செய்து திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்தப் புகைப்படத்தை பிந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரீஷ், மாடலிங் ரைசாவுடன் இணைந்து ப்யார் ப்ரேம காதல் (PyaarPremaKaadhal) என்ற படத்தில் நடித்து வருகிறார்.