திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற்றது திருவண்ணாமலையில் கடந்த சனிக்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டு இரண்டாம் நாளில் அண்ணாமலையார் கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்து கோவில் ராஜகோபுரம் முன்புள்ள கால் மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளான தேரடி வீதி, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெரு வழியாக அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன் மற்றும் துர்கையம்மன் கிரிவலம் வந்தனர். கிரிவலப்பாதையில் வழி நெடுகிலும் நின்றிருந்த பக்தர்கள் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்தனர்.