திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்

முருகன் அவதரித்த நாளாக வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் ஆண்டு தோறும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி  மற்றும்  சுற்று வட்டார அனைத்து முருகன் கோவில்களில்  பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் வழிபாடு நடத்தினர்

திருச்செந்தூரில் கடலில் புனித நீராடிய பக்தர்கள் முருகனை வழிபட்டனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதே போல திருநெல்வேலி குறுக்குத்துறை சாலைக்குமார சுவாமி கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான தென்காசி, கடையம்,  ஆழ்வார் குறிச்சி போன்ற இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில்வைகாசி விசாக திருவிழா வெகு  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

ஆய்க்குடி பாலப்பிரமணிய சுவாமி, பண்பொழி திருமலைகோயில், இலஞ்சி குமாரர் கோயில் உள்ளிட்ட தலங்களில் வைகாசி விசாக திருவிழா பக்தர்களின் பக்தி கோஷம் முழங்கிட கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குடி கொண்டுள்ள முருகப் பெருமான் ஆலயம், புளியங்குடி , சிவகிரி , திருமலையப்பபுரம்  மற்றும் பாப்பான்குளம் ஆகிய இடங்களிலும் வைகாசி விசாக திருவிழா  வெகு சிறப்பாக கொண்டாடப்பது.