திருச்சி -மானாமதுரை பயணிகள் ரயில் ரத்து

புதுக்கோட்டை – காரைக்குடி இடையே பொறியியல் பணி நடை பெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கபடுவதில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

16.06.2019 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 06.50 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய வண்டி எண் 76830 காரைக்குடி – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 06.20 மணிக்கு புறப்படும்.

16.06.2019 அன்று (ஞாயிற்றுக்கிழமை) வண்டி எண். 76807/76808 திருச்சிராப்பள்ளி – மானாமதுரை – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது.