தியேட்டர் மீது வழக்கு… சீம ”ராஜா”வின் துணிச்சல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘சீமராஜா’.  இந்தப் படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார்.  இந்தப் படம் வெளியாகி சுமார் ரூ 48 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்த நிலையில் இப்படத்தை விருதாசலத்தில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் திருட்டு விசிடி எடுத்துள்ளனர்.

அதை அதிகாரப்பூர்வமாக கண்டுப் பிடித்த ‘சீமராஜா’ படத் தயாரிப்பாளர் ராஜா, சட்ட ரீதியாக வழக்கு தொடர முடிவு செய்துள்ளாராம். அது மட்டுமின்றி அந்த தியேட்டரின் மீது ரூ 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளார்களாம்.