தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடிய அரசியல் பிரமுகர்

நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட ஒரு மாதத்தில், குறிப்பிட்ட  ஒரு நதியில் ‘புஷ்கரம்’ என்று சொல்லப்படும் விழா நடைபெறுவது மரபு.

அந்த வகையில் இந்த ஆண்டு தாமிரபரணியில் அக்டோபர் மாதம்  நடைபெற இந்த விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது  இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசும், துறவிகள் கூட்டமைப்பும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஜான் பாண்டியன் இன்று தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடினார்