தாஜ்மஹால் வளாக தூண் இடிந்து விழுந்தது

கடும் மழை மற்றும் சூறைகாற்று காரணமாக தாஜ்மஹால் வளாக தூண் இடிந்து விழுந்தது. உ.பி. மாநிலம் மதுரா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இங்கு ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது. நேற்று இரவு உலக அதிசயமான தாஜ்மஹால் வளாகத்தின் தெற்கு நுழைவு வாயிலில் உளிள தூண் திடீரென இடிந்து அதில் இருந்த கலசங்கள் கீழே விழுந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை. மேலும் மதுரா மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக வீடு இடிந்து விழந்ததில் மூன்று பேர் பலியாயினர். தவிர நந்தகோவன், விருந்தாவன், கோசி காலன் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் சோதமடைந்தன.