தல ரசிகையின் ஆசையை தளபதி நிறைவேற்றுவாரா…?

கோலிவுட்  மாஸ் ஹீரோக்களான விஜய், அஜித்துக்கு  உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.  அஜித், விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கும். அது போல பிரபல நடிகை அதிதிக்கும் வந்துள்ளது.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் எளிமையான கதை பின்னணியில் வெளியாகிய படம் அருவி ஆனால், படத்தை ஒரே ஆளாக தூக்கி நிறுத்தியவர் என்னவோ அதிதி தான் என நெட்டிசன்கள் கிசுகிசுத்தனர்

தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் ஒன்றில், “நான், ‘தல’ ரசிகை.  ஆனால், விஜய்யுடன் நடிக்க ரொம்ப விருப்பம்.  தமிழ் திரையுலகை பொறுத்தவரை அனைவருக்கும் உள்ள ஆசை இது” என பேட்டியில் அவர் கூறியுள்ளார். அஜித்தின் ரசிகை நடிகை அதிதியின் ஆசையை விஜய் நிறைவேற்றி வைப்பாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.