தற்போது வரை தரணியில்……(ஈவ்னிங்) ?09/02/18 !

?செய்திகள் அப்டேட்✍? (ஈவ்னிங்) ?09/02/18 !

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியா வருகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை சிறையில் உள்ள 113 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை கடிதம்.

தமிழகத்தில் 6 மாதத்தில் தேர்தல் வரலாம்: திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது.பட்டாசு வெடிப்பதால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது இல்லை – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு.

தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் – சிபிஎஸ்இ அறிவிப்பு.

டீசல் விலை உயர்வு, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகள் விடுவிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16-ல் பாம்பன் பாலம் முற்றுகை – நாகையில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு.

தமிழகத்தில் 4 மருத்துவக் கல்லூரிகளில் 345 இடங்கள் அதிகரிப்பு – மத்திய அரசு.

கோவை, நெல்லை, குமரி, மதுரை ஆகிய 4 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயர்த்த ரூ.82.56 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு.

தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடகா சென்று ரஜினி முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக 2014, 2015, 2016இல் 218 பேர் உயிரிழப்பு : மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தகவல்.

ஆண்டாள் விவகாரத்தில் , வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தான் மேற்கொண்ட இரண்டாம் கட்ட உண்ணாவிரத்தை கைவிட்டார் சடகோப ராமானுஜ ஜீயர்.

பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்புக்கு மருத்துவமனைகளில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் : சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்ல தடை : செல்போன்களை கொடுத்துச்செல்ல தனி கவுண்டர்கள் உருவாக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தமிழகத்தில் உள்ள 2 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு ரூ.165 கோடி நிதியுதவி : திருச்சி கிஆபெ.விஸ்வநாதன் அரசு மருத்துவமனைக்கு ரூ.45 கோடியும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.120 கோடியும் நிதியுதவி – மத்திய அரசு.

தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை இன்னும் தேர்வு செய்யப்படவில்லை : மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை.

துப்பாக்கியை தூக்குவோருக்கு துப்பாக்கியால் பதிலடி கொடுக்கப்படும் – உ.பி. முதல்வர்.

மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்துள்ளது .வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர மற்ற பகுதிகள் பாதிக்கப்படவில்லை – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியை பாதிக்கக்கூடிய நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது – டிடிவி.தினகரன்.

ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனுக்கு
பிப்.13 அல்லது 14ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் : விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்.

தமிழ்நாட்டில் 40 மணல் குவாரிகளை திறக்க முடிவு : இயில் ஆட்சியாளர்களுக்கோ தினமும் ரூ.8 கோடி பணம் கிடைக்கும் – பாமக நிறுவனர் ராமதாஸ்.

விவசாய நிலத்தில் டிராக்டர் உழுது அத்துமீறியதாக ஆரணி டிஎஸ்பி ஜெரினாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் சம்மன்.

தமிழகத்தின் முக்கிய கோயில்களில் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் டிராபிக் ராமசாமி முறையீடு : ஜீயர் போன்றோர் கோயில்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை.

சென்னை : ஆவடி ராணுவ வீரர்களுக்கு சீருடைகள் தயாரிக்கும் ஆலையை முடக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, செந்தமிழன் அதிமுகவில் இருந்து நீக்கம் – ஓபிஎஸ் , இபிஎஸ்.

ஜீயரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட கோரினேன். உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்கத் தேவையில்லை என்று வலியுறுத்தினேன் – எச்.ராஜா.

லஞ்சம் பெற்றுக் கைதான DSP தனராஜன் மற்றும் SI லூர்து ஜெயராஜை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு.

மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 22 கடைகள் மட்டுமே இன்று அப்புறப்படுத்தப்படுகிறது.மீதமுள்ள 145 கடைகள் மற்றும் புதுமண்டபத்தில் உள்ள 306 கடைகளும் விரைவில் அகற்றப்படும் – கோயில் நிர்வாகம் தகவல்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை அதிகாரி கைது: வாட்ஸ் அப்பில் ரகசியங்களை அனுப்பியது அம்பலம்.

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்த மருத்துவமனையிலும் உயிரிழப்பு ஏற்படவில்லை – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன், ஜெயலலிதா 2 வது உதவியாளர் கார்த்திகேயனுக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்கோடா விற்று வழக்கறிஞர்கள் போராட்டம்.

கடலூரில் கெடிலம் ஆற்று கரையோரம் உள்ள வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவு அப்பகுதி மக்கள் அகற்ற மறுப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி.

வேலூர் : சத்துவாச்சாரியில் மாரியம்மன், பொன்னியம்மன் கோயிலில் உள்ள 2 தேர்கள் எரிந்து சேதம்.

திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த உமையாள் தேவி (51) என்ற பெண் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பு.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது; மத்தியஸ்தர் பத்மநாபன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்பு.

இந்தியாவில் இருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிக தடை.

சிரியாவில் உள்நாட்டு போர் உச்சகட்டம் : வான்வழித் தாக்குதலில் 59 பேர் உயிரிழப்பு.

ஈரோட்டில் ஜவுளி கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை : பரணி சில்க்ஸ் நிறுவனம், பரணி பட்டு சென்டர், கலாமந்திர், மலர் சில்க்ஸ் நிறுவனங்களில் சோதனை.