தமிழ் இருக்கைக்கு கமல் ரூ.20 லட்சம் நிதி

அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ் அறிஞர்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார்கள். உலக அளவில் அதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழ அரசு 10 கோடி ரூபாய் நிதி அறிவித்தது. தொடர்ந்து விஷால் ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தார். கனடாவில் நடந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வருவாயை ஏ.ஆர்.ரஹ்மான் அளித்தார். இப்போது நடிகர் கமல்ஹாசனும் தன் பங்கிற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்த நிதியை அளித்தார்.