தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க சசிகலாவின் தலைமையை ஏற்க தயாராகிவிட்டது #அதிமுக..!

பாராளுமன்ற தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைத்து 20 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியை பா.ஜ.க நிர்பந்திக்கின்றது…

இந்நிலையில் பாஜக உடன் கூட்டணி வைத்தால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்ற நிலை உள்ளதால் தம்பிதுரை தலைமையில் அதிமுகவின் MP க்கள் 25 பேரும் சட்டமன்ற உறுப்பினர்கள் 70 பேரும் அதிமுக வின் பொதுச்செயலாளர் திருமதி சசிகலா நடராஜன் அவர்களை சந்தித்து தலைமையை ஏற்று பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க தயாராகிவிட்டனர் என்று அதிமுகவின் #முக்கிய_அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்…

தேர்தல் நெருக்கடி இல்லாதபோது சசிகலா அவர்களின் உதவி தேவைபடாமல் இருந்தது ஆனால் தேர்தல் நெருக்கடியை* சமாளிக்கவும் கட்சியை #கட்டுக்கோப்பாக_நடத்தவும் போதிய அனுபவம் சசிகலா அவர்களுக்கு மட்டுமே இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் கூட்டணி பற்றியும் தேர்தல் வெற்றி வியூகங்களை வகுப்பதிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அதன் மூலம் பலமுறை வெற்றிகளையும் பெற்று தந்ததில் #சசிகலாவின் பங்களிப்பு முக்கியமானது
என்றும் அவர் தெரிவித்துள்ளார்…