தமிழகத்தில் ஆடர்லி என்ற முறையே இல்லை…டிஜிபி பதில்

ஆடர்லி முறையை ஒழிக்க கோரி சுப்பு என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் போலீசார் நலன் மற்றும் பணிச்சுமை தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், போலீசாருக்கு வார விடுமுறை வழங்குவது குறித்து உள்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  மக்களுக்கு பிரச்னை என்றால், போலீசாரிடம் செல்வார்கள்.

போலீசுக்கு பிரச்னை என்றால், எங்கு செல்வார்கள். போலீசார் அதிகளவில் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. திட்ட சதிச் செயல்களை தடுத்து நிறுத்தினால், போலீசார் மீதான தாக்குதல் குறையும். இதற்காக கர்நாடகா, மஹாராஷ்டிராவில் உள்ளது போல் தமிழக அரசும் சட்டம் கொண்டு வர வேண்டும் எனக்கூறினார்.

இந்த வழக்கில் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் ஆடர்லி என்ற முறையே இல்லை , போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வாகனங்கள் ஒதுக்கப்படவில்லை. டிஜிபி முதல் எஸ்பிக்கள் வரை 170 அரசு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீட்டில் போலீஸ் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாதாரணமாக நீதிபதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அவர்களின் வீட்டு வேலைகளை பார்ப்பதற்கு பொதுப் பணித்துறையில் இருந்து ஆட்களை நியமிப்பார்கள். அதுவே காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் காவலர்களை நியமிப்பார்கள் இதற்குத்தான் ஆர்டர்லி என்று பெயர்.  1979-ம் ஆண்டு தமிழக அரசு காவல்துறையில் நிலவும் ஆர்டர்லி முறையை ஒழிக்கும் வகையில் அரசானை ஒன்றை பிறப்பித்தது.

.