தன்னுடைய சாதனையை தானே முறியடிக்க 15 மணி நேரம் இடைவெளி விடாமல் கிரிக்கெட் பந்து வீசும் மாநில கல்லூரி மாணவன்

சென்னை மாநில க் கல்லூரி மாணவன் செந்தில்வேல்குமார், மாநில கல்லூரியின் மைதானத்தில் இன்று காலை 5.30 மணியில் இருந்து உலக சாதனை படைக்கும் நோக்கில் ஒரு கையை கட்டிக்கொண்டு 15 மணி நேரம் இடைவிடாமல் கிரிக்கெட் பந்து வீசி வருகிறார். இவர் தொடர்ச்சியாக 15 மணி நேரம் ( 1000 ஓவர்களுக்கு மேல் ) பந்து வீசும் பட்சத்தில் இவருக்கு “வில் மெடல் அஃப் வேர்ல்ட் ரெகார்ட்” உலக சாதனைக்காக சான்றிதழ் வழங்கப்படும்.கடந்த 2018ம் ஆண்டு ஏற்கனவே இந்த மாணவன் செந்தில்வேல் குமார் பாளையங்கோட்டையில் இடைவெளி விடாமல் 10 மணி நேரம் 450 ஓவர்கல் வீசி இதே உலக சாதனை படைத்தார், இதனால் அவரின் சாதனை அவரே முறியடிக்கும் நிகழ்வினை மாணவன் செந்தில் நிகழ்த்தி வருகிறார்.

 

 

முன்னதாக மாணவன் செந்தில் வீசிய பந்திற்கு அமைச்சர் ஜெயகுமார் பேட்டிங்க் செய்தார்.

சாதனையை நிகழ்த்தி வரும் மாணவனை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது,

முரளித்தரராவ் பாஜக கூட்டணி குறித்து கூறிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, கூட்டணி குறித்து அதிமுக தலைமை விரைவில் முடிவு எடுக்கும் எனவும் கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டு படுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் தேர்தலுக்கு தேவையான அனைத்து குழுக்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தேமுதிக பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசுவது தொடர்பான கேள்விக்கு அதிமுகவிற்கு ,திமுக தான் நிரந்தர எதிரி அமமுக தான் நிரந்தர துரோகி ஆகவே இந்த இரண்டு கட்சிகளை தவிர வேறு எந்த கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.

2000 ரூபாய் பணம் ஓட்டுக்காக அல்ல எனவும், சமூக நீதிக்கான நிவாரணம் தான் என்றார். திராணி இல்லாத திமுக மற்றும் அமமுக போன்ற கட்சிகள் இவற்றை தவறாக விமர்சிக்கின்றனர்.

ஓசூர் தொகுதி காலியாக அறிவிக்கப்படுவது குறித்து சபாநாயகர் தான் பேசவேண்டும் எனவும் அதை பற்றி நான் பேச விரும்பவில்லை என்றார். ( கடந்த 10ம் தேதி பட்ஜெட் முடிவில் சபாநாயகர் தனபால் செய்தியாளர்களை சந்தித்தபோது அரசிடம் இருந்து ஓசூர் தொகுதியை காலியாக அறிவிக்கவேண்டும் என்று எந்த கடிதமும் வரவில்லை என சபாநாயகர் பகிரங்கமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது )

மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கூறிய கருத்தையும் ஊடகங்கள் தவறாக பிரசுரிகின்றனர்.