தனுஷ் இயக்கத்தில் ‘நான் ருத்ரன்’

தனுஷ் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் நடிகர் தனுஷ். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. எனவே, அவர் அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது.

தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் பணப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.

400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை இது. இந்தப் படத்துக்கு ‘நான் ருத்ரன்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம். இந்தப் படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *