தண்டவாளத்தில் பிணமாக கிடந்த காதல் ஜோடி

மதுரை — திண்டுக்கல் ரயில் மார்க்கத்தில் தர்மாபுரி என்ற இடத்தில் தண்டவாளத்தில் ஒரு இளம் பெண்ணும், வாலிபரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

கொடை ரோடு ரயில்வே போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி விசாரித்து கூறியதாவது: சோழ வந்தான் அருகே தச்சம்பத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் கவுசல்யா(17)  அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.  இவரும் ஐ.டி.ஐ., மாணவர், சோலை குருசாமி( 20) யும் காதலித்தனர். இரு தரப்பிலும் எதிர்ப்பு காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் மாயமாகினர்.

கவுசல்யாவின் பெற்றோர் சோழ வந்தான் போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் கொடை ரோடு அருகே தண்டவாளத்தில் சோலை குருசாமி உடலில் காயங்களுடனும், கவுசல்யா முகம் சிதைந்த நிலையிலும் இறந்து கிடந்தனர். தற்கொலையா, கவுரவக் கொலையா என விசாரிக்கிறோம்” என்றனர்.