டி. ராஜேந்தர்- டிடிவி தினகரன் சந்திப்பு

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார் சிம்பு.

இவரது தம்பி குறளரசன் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனிடையே இஸ்லாமியப் பெண்ணான நபீலா ஆர். அஹமத். என்பவரை குறளரசன் காதலித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இதை தொடர்ந்து குறளரசன் – நபீலா ஆர். அஹமத் ஆகியோரின் திருமண வரவேற்பு இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற 29-ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறளரசனின் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக குறளரசன் திருமண அழைப்பிதழை டி.ராஜேந்தர் முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்ககளிடம் நேரில் வழங்கி வருகிறார்  அதன் ஒருபகுதியாக  டி. ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசன் திருமண அழைப்பிதழை அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரனிடம் நேரில் வழங்கினார்