டி. டி. வி. தினகரன் பிறந்த நாள் இன்று…டி. டி. வி. தினகரன் பிறந்த நாள் இன்று…

டி.டி.வி. தினகரன்  திருத்துறைப்பூண்டியில் டிசம்பர் 13, ம் தேதி 1963 ஆண்டு பிறந்தார். 5, நான்காவது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை முகவரியில் வசித்து வருகிறார்.தற்போதைய பட்டம் துணைப் பொதுச் செயலாளர், அதிமுக (அம்மா) வாழ்க்கைத் துணைவி பெயர் டி. அனுராதா. பிள்ளைகள் ஒன்று … உறவினர்கள் வி. என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி. கே. சசிகலா, எம். நடராஜன், ஜெ. இளவரசி, டாக்டர். எஸ். வெங்கடேஷ்….டி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அம்மா பிரிவின் துணைப் பொதுச் செயலாளரும் ஆவார். இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த மூத்த சகோதரி வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.[1][2] இவரது இளைய தம்பி வி. என். சுதாகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.
டி. டி. வி. தினகரன் 1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999 – 2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004-2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்,[4].
ஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர். பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[8] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.[9]
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பிரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்
1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[10]
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[11] பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *