டிராய் அதிரடி..

அனைத்து சேவைகளையும் பயனர்களுக்கு ஒரே விதமாக வழங்குவதை உறுதிப்படுத்தும் இணைய சமநிலை பற்றி இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக்களை கேட்டறிந்தது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுத்து, தனது கருத்துக்களை இந்த மாத இறுதியில் வெளியிட உள்ளது என அதன் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார். இதுபோல் வாட்ஸ் ஆப், ஸ்கைப், ஹைக் போன்றவை அழைப்பு, தகவல் பரிமாற்ற சேவைகளை வழங்கி வருகின்றன. இதிலும் இணைய சமநிலையற்ற தன்மை நிலவுகிறது. இது பற்றி பொது விவாதத்துக்காக விரிவான பரிந்துரை அறிக்கைகளை டிராய் விரைவில் வெளியிட இருக்கிறது. *