ஜெ. வீட்டை நினைவு இல்லம் ஆக்கலாம்… ஆட்சியர் அறிக்கை

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக அரசு மாற்றுவது முற்றிலும் பொருத்தமான நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து இறுதி அறிக்கையை அரசிடம் ஆட்சியர் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து வேறு இடத்தில் நினைவு சின்னம் அமைப்பது அரசின் கொள்ளை முடிவுக்கு எதிரானது எனவும் இதனால் மக்களின் உணர்வும் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நில எடுப்பினால் பாதிக்கப்படும் நபர்கள் எவரும் இல்லை என்பதால் பாதகமான சுமூக தாக்கல் என்ற வினா எழவில்லை என அவர் தெரிவித்தார்.