ஜன்னல் வழியாக எட்டி பார்த்த ஏட்டையாவிற்கு தர்மஅடி

கோவில்பட்டி புதூர் ரோடு பகுதியை சேர்ந்த கலியுகவரதன் (வயது47). தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருகிறார் இவர் நேற்று நள்ளிரவு டூவிபுரம் 5-வது தெருவில் உள்ள ஒருவரது வீட்டிற்குள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த படி இருந்துள்ளார்.

இதனை அந்த வீட்டின் உரிமையாளர் கவனித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து  கலியுக வரதனை கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்த போது தான் கலியுகவரதன் தான் போலீஸ் ஏட்டு என்பதை தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து அவரை  தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில்  ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *