சொல்லிட்டாங்கய்யா சொல்லிட்டாங்க….

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவக் கூடிய வகையில் மாதிரி விடை குறிப்பு புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ஏற்ற வகையில் இந்த கையேடு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்

சென்னை லயோலா கல்லூரியில் பல்லுயிர் பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு, தொடங்கியது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று பொருள் கிடைக்கிற பட்சத்தில், அதற்கும் விரைவில் தடை செய்யப்படும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் இன்பதுரை, திமுக ஆட்சியில் இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுத்தாலும் மின்சாரத்தை கொடுத்தது அதிமுக அரசு தான் என கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், உறுப்பினர் சொல்வது உண்மை தான் என்றும், அந்த தொலைக்காட்சி பெட்டிகள் இப்போதும் பயன்படுவதாக தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும் துரைமுருகன் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பா.ஜ.க., அ.தி.மு.க அரசின் நிர்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து போகுமேயானால், அதை எதிர்த்து அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் இதன் மூலம் தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவும் , கால விரயமும் குறையும் என்று கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார் இடைத்தேர்தலில் நடைபெறும் பணப் பட்டுவாடாவை தடுப்பது போன்றவை கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது என்றும் அதை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்