சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. அதிகபட்சமாக செங்கோட்டை மலைப்பகுதியில் உள்ள அடவிநயினார் அணைப்பகுதியில் 50 மில்லி மீட்டரும், குண்டாறு அணைப்பகுதியில் 45 மில்லி மீட்டரும் பெய்துள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் 21 மில்லிமீட்டர் மழையும், செங்கோட்டை நகரப்பகுதியில் 21 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. அம்பையில் 26 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகாரித்துள்ளது.

பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக இருந்தது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 112.25 அடியாக உயர்ந்துள்ளது. பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீர் சேர்வலாறு அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 114.83 அடியில் இருந்து, ஒரே நாளில் 9 அடி உயர்ந்து இன்று காலை 123.23 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 173 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 71.65 அடியாக உள்ளது. கடனா நதியின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று 83.50 அடியாகவும், ராமநதியின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று 75.25 அடியாகவும் உள்ளது.

அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 118 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 126 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. கொடுமுடியாறு அணையில் 41 அடி நீர்மட்டம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *