சேகுவாரா பிறந்த தினம் இன்று 14-06-18

🏁 கியூபாவின் விடுதலைக்காக போராடிய சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா 1929ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அர்கெந்தீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா

🏁 குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. இவர் மார்க்ஸ் போல்க்னர் கைடே சல்காரி வேர்னே நேரு லெனின் புத்த அரிஸ்ட்டாட்டில் போன்ற இன்னும் சிலருடைய நூல்களையும் விரும்பி வாசித்தார்.

🏁 சே குவேரா பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைந்து 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றினார்கள். பிறகு கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.

🏁 தென்அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தபோது எழுதிய மோட்டார் ஈருளிக் குறிப்புகள் என்னும் நூல் 2004-ல் திரைப்படமாக வெளிவந்த விருதுகளையும் பெற்றது.

🏁 விளையாட்டு வீரர் புரட்சியாளர் மருத்துவர் மார்க்சியவாதி அரசியல்வாதி பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப் பல முகங்களைக் கொண்ட மக்களின் நண்பர் தனது 39வது வயதில் (1967) மறைந்தார்.