செய்தி சிதறல் (3) மாலை 4 மணி வரை இன்று

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் பொறியியல் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஷாகீல் கோர்மத் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை

 

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றேன்; நாகர்கோவிலை மாநகராட்சியாக்க வேண்டும் என முதல்வரரிடம் கோரிக்கை வைத்தேன் – நாகர்கோவிலில் முதல்வரை சந்தித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

 

சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 200கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது,படிப்படியாக 1500கனஅடியாக அதிகரிக்கப்படும் என ஆந்திர அதிகாரிகள் தகவல். 5 நாட்களில் கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு

 

கரூர் தினமலர் டாட்காம் செய்தியாளர் ஆனந்தகுமார், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பற்றி செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு, கரூர் நகர காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ரிமாண்ட் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்

 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறிய தகவல்கள் உண்மையா, பொய்யா என்பதை பிரதமர் விளக்க வேண்டும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 100 சதவிகிதம் ஊழல் நடந்துள்ளது.- ராகுல் காந்தி