செய்தி சிதறல்கள் (2) மாலை 5 மணி வரை இன்று

மல்லையா தப்பி சென்ற விவகாரத்தில் லுக்அவுட் நோட்டீசை திருத்தி தவறாக கணித்து விட்டோம் என்று சிபிஐ போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

 

இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் – புதுக்கோட்டை மீனவர்களுக்கு காவலை நீடித்து இலங்கை கோர்ட்டு உத்தர விட்டுள்ளது

 

தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம்- வள்ளிக்கண்ணு ஆகியோரின் மகள் சசிகலா திருமணத்தை முக ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

 

எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருடியவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்

மதுரையில் இருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விழுப்புரத்தை தாண்டி வந்து கொண்டிருந்தது.கடைசி பெட்டிக்கு அருகில் உள்ள எஸ்.9 ரிசர்வேசன் பெட்டியில் நள்ளிரவு ஏறிய ஒரு வாலிபர் பயணிகளின் உடமைகளை திருட முயற்சித்தார். தூங்கிக் கொண்டிருந்த ஒரு பயணியின் தலைஅடியில் இருந்த பையை எடுக்க முயன்றபோது அவர் விழித்துக் கொண்டு கூச்சல் போட்டார்.உடனே அருகில் இருந்த பயணிகள் எழுந்து அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.இந்த ரெயிலில் ஆர்.பி.எப். போலீசார் இல்லாததால் பயணிகளே காவலுக்கு இருந்து அந்த வாலிபரை செங்கல்பட்டு ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

 

குட்கா ஊழல் வழக்கில் இன்ஸ்பெக்டர் சம்பத் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகள் முன் ஆஜரானார்

 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் ரத்தின அங்கி மற்றும் முத்தங்கிகளில் முத்து, ரத்தின கற்கள் மாயமாகி உள்ளதாக யானை ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

 

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 6 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.