சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு

 

நேற்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென் மேற்கு வங்ககடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து 20 ஆம் தேதி தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் ஒட்டி நிலைக்கொள்ளும்.

இது காற்றழத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களிலும் கன மற்றும் மிக மன மழையும் தென் மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20,21ஆம் தேதி உள்மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும்.

கடலூர்,நாகப்பட்டினம், காரைக்கால்,சிவகங்கை,புதுகோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது

மீனவர்கள் 20,21 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது மிதமான மழை பெய்யும்.

அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி இன்று வரையில் தமிழகம் முழுவதும் சராசரி அளவை காட்டிலும் 20 சதவிதம் குறைவு என்றும் சென்னையை பொருத்த வரையில் இயல்பை விட 60 சதவிதம் குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 7 செமீ மழையும்,கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 6 செமீ மழையும்,ஈரோடு மாவட்டம் பவானியில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது