சென்னை ஐஐடி விடுதியில் கேரள மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை ஐஐடியில் பெருங்கடல் பொறியியல் பிரிவில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஷாஜஹான் குர்முத்தின் மகனான ஷாஹித் குர்முத் (23) 5 ஆண்டு பட்டப்படிப்பை பயின்று வந்தார்

இந்நிலையில் அவர் தனது ஜமுனா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதல்கட்ட விசாரணையில் ஷாஹித் தனது குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. இவர் அடிக்கடி தனது பெற்றோர் மற்றும் சகோதரர் உடன் தொலை பேசியில் சண்டையிட்டு வந்துள்ளார்.

நேற்று இரவு மிகவும் வேதனையுடன் தொலைபேசி அழைப்புகள் எதற்கும் பதிலளிக்கவில்லையாம் மேலும் தனது தற்கொலைக்கு காரணமாக எந்தவொரு கடிதமும் அவர் விட்டுச் செல்லவில்லை.

அதே சமயம் வருகைப் பதிவேட்டில் போதிய வருகை சதவீதம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.