சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில்கார் கவிழ்ந்தது

சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில்கா ர் கவிழ்ந்தது அமாவாசை தினத்தை முன்னிட்டு ஊத்துக்குளி ஜேடர்பாளையத்தை சேர்ந்த ஒரு பெரியவர் ஒருவர் தனது மகள் மற்றும் 5 வயதுடைய பேத்தியுடன் சென்னிமலை முருகன் கோவிலுக்கு காரில் வந்திருந்தார்.

பிறகு சாமி தரிசனம் செய்து விட்டு மாலை சுமார் 4.30 மணியளவில் முருகன் கோவிலில் இருந்து காரில் கீழே வந்து கொண்டிருந்தார்.

அப்போது மேலிருந்து வரும் போது முதலில் உள்ள வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக 20 அடி பள்ளத்தில் அவரது கார் கவிழ்ந்தது. அந்த காரில் வந்த அனைவருமே அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தப்பினார்கள். பிறகு அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வேறு கார் மூலம் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

மலை மேல் இருந்து அந்த கார் கீழே வரும் போது கியரில் வராமல் நியூட்டரில் வந்ததால் ஸ்டியரிங் லாக் ஆகி திருப்ப முடியாமல் பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிகிறது.